Home /News /tamil-nadu /

சொத்து வரி பிரச்னையை திசைதிருப்ப திமுக மொழி பிரச்னையை கையில் எடுக்கிறது - வி.பி.துரைசாமி

சொத்து வரி பிரச்னையை திசைதிருப்ப திமுக மொழி பிரச்னையை கையில் எடுக்கிறது - வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி

BJP V P Duraisamy | தமிழகம்  முழுவதும் நாங்கள் மின் இணைப்பு வழங்க தயார் ஆனால் அதில் அணில்  போகாமல்  பார்த்துகொள்ள முடியுமா என்று வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்து வரி உயர்வுக்கு பாஜக நடத்திய போராட்டத்தை திசை மாற்றுவதற்கு மொழிப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ளது திமுக என வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 3.5 கோடி கிராம வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'சமூகநீதிக்கான 2 வாரம்' எனும் தலைப்பில்  ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா சுகந்தரம் பெற்ற நாள் முதல் குடிநீருக்கான ஒரு அமைச்சரவை ஏற்படுத்திய அரசு பாஜக அரசு என்றும்,  3 ஆண்டுகளுக்கு முன்னாள்  3 லட்சமாக இருந்த குடிநீர் இணைப்பு தற்பொழுது  3 ஆண்டுகளுக்குள்  10 லட்சம் இணைப்பாக வழங்கபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 31 லட்சம் மேல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.



சொத்து வரி உயர்வுக்கு பாஜக நடத்திய போராட்டத்தை திசை மாற்றுவதற்கு மொழிப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ளது திமுக. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க  மத்திய அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

ALSO READ | சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

மேலும் தமிழகம்  முழுவதும் நாங்கள் மின் இணைப்பு வழங்க தயார் ஆனால் அதில் அணில்  போகாமல்  பார்த்துகொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர்  பெட்ரோல் டீசல் விலையை குறைக்க  மத்திய அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்கும்  என்றும் தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: BJP, Property tax

அடுத்த செய்தி