Home /News /tamil-nadu /

வாக்குச்சாவடியில் பெண் போலீஸ் மொபைலை பறித்த திமுக பிரமுகர்... வீடியோ வெளியாகி பரபரப்பு

வாக்குச்சாவடியில் பெண் போலீஸ் மொபைலை பறித்த திமுக பிரமுகர்... வீடியோ வெளியாகி பரபரப்பு

திமுக பிரமுகர் வாக்குவாதம்

திமுக பிரமுகர் வாக்குவாதம்

திமுகவைச் சேர்ந்த வெங்கடேஷ் பெண் போலீஸான ரேவதியின் செல்போனை பறித்துகொண்டு அவரையும் மிரட்ட தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு  பெண் போலீசின் மொபைலை பறித்த திமுக பிரமுகரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. வாக்குகள் நாளை மறுநாள் (22)  எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி 115 வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும் திமுக 115 வது வட்ட செயலாளருமான ஜி.வெங்கடேஷ் நேற்று  வாக்கு சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

திருவல்லிக்கேணி Immaculate பள்ளியில் இருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வெங்கடேஷ் வந்துள்ளார். அப்போது செல்போனுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல அவரை போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வெங்கடேஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவலரை அதிமுகவை சேர்ந்தவரா என்று கேட்டு ஒருமையில் பேசியுள்ளார்.



இதனை அங்கிருந்த பெண் போலீஸ் ரேவதி என்பவர் தனது செல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தார். வெங்கடேஷ் ரேவதியின் செல்போனை பறித்துகொண்டு அவரையும் மிரட்ட தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.  இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Chennai Police, DMK, Local Body Election 2022

அடுத்த செய்தி