Home /News /tamil-nadu /

திமுக வட்டச் செயலாளர் அலுவலகம் சூறையாடல்.. பணத்தை திருடிச்சென்ற இளைஞர்கள் கைது

திமுக வட்டச் செயலாளர் அலுவலகம் சூறையாடல்.. பணத்தை திருடிச்சென்ற இளைஞர்கள் கைது

இளைஞர்கள் கைது

இளைஞர்கள் கைது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திமுக வட்ட செயலாளர் ஜெய் சங்கரின் அலுவலத்தை இளைஞர்கள் சிலர் சூறையாடினர்.

திமுக வட்டச் செயலாளர் அலுவலகத்தை சூறையாடி 3 ஆயிரம் பணம் திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெய் சங்கர் (54). இவர் தி.மு.க 100வது வட்டச் செயலாளராக இருந்து வருவதுடன் பிளாஸ்டிக் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில் வட்டச் செயலாளர் ஜெய் சங்கர் நேற்று இரவு 9 மணியளவில் கட்சி ரீதியிலான அலுவல் பணிகளை முடித்து அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மூன்று பேர் ஜெய் சங்கரின் அலுவலகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்திலிருந்த கருணாநிதி சிலையை உடைத்ததுடன், கோப்புகளை கிழித்து எறிந்து சூறையாடினர். மேலும், அருகில் இருந்த மாவுக் கடை, பிரியாணி கடையிலும் பணம் மற்றும் உணவு கேட்டு ரகளையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.

Also Read: ப்ளூ பிலிம் ஞாபகம் இருக்கா.. பை பை பாபு.. சந்திரபாபு நாயுடுவை விளாசிய ரோஜா

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சுமார் 10 மணியளவில் தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஜெய் சங்கர் தனது அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பதையும், அலுவலக மேஜை டிராயரில் வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜெய் சங்கர் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தி.மு.க வட்டச் செயலாளர் அலுவலகம் உட்பட 3 கடைகளை சூறையாடிய ஐய்யப்பாக்கத்தைச் சேர்ந்த மணி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ் (எ) நெருப்பு ராஜேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read: வீடியோ காலில் வலை வீசிய வில்லங்க பெண்.. இளைஞரை நிர்வாணமாக்கி பணத்தை சுருட்டிய கும்பல்

இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இதே இடத்தில் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும், தங்களது கட்சிப் பணிகளை தளர்வுபடுத்தவே அ.தி.மு.க-வினர் இதுபோன்ற கும்பல்களை ஏவி அசம்பாவிதங்களை ஏற்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாகவும், இது குறித்து காவல் துறையிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவும் தி.மு.க வட்டச் செயலாளர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Chennai, Crime | குற்றச் செய்திகள், DMK, Police

அடுத்த செய்தி