• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனைவி குடும்பத்தினர் டார்ச்சர் செய்கிறனர்- சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்த தி.மு.க பிரமுகர்

மனைவி குடும்பத்தினர் டார்ச்சர் செய்கிறனர்- சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்த தி.மு.க பிரமுகர்

Youtube Video

சென்னையில் மனைவி குடும்பத்தினர், டார்ச்சர் செய்வதாகக் கூறி செல்போனில் தனது வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவு செய்து வைத்து விட்டு, திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  • Share this:
    சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் தெருவைச் சேர்ந்தவர் 34 வயதான வித்யாகுமார். சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். 115வது வார்டு திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

    இவருக்கும் 32 வயதான நிஷா என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. 6 மாதங்கள் சுமுகமாக சென்ற நிலையில், கடந்த 3 மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 15ம் தேதி வித்யாகுமாரின் தாயார் சம்யுக்தா அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மருமகள் நிஷா மீது புகார் கொடுத்திருந்தார்.

    அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷகிலா, செப்டம்பர் 16ம் தேதி இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நிஷா தனது வழக்கறிஞர்களுடன் சென்று புகார் செய்துள்ளார்.

    புகாரைப் பெற்ற போலீசார் விசாரணைக்காக வித்யாகுமாரை செல்போனில் அழைத்துள்ளனர். அப்போது, வித்யா குமார் தான் வெளியில் உள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் வித்யா குமாரின் பெற்றோரை போலீசார் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைக் கேள்விப்பட்டு மனவேதனை அடைந்த வித்யா குமார் தனது எலக்ட்ரிக் பொருட்கள் வைக்கும் குடோனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த ஜாம்பஜார் போலீசார் சடலத்தை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதற்கிடையே, வித்யா குமாரின் செல்போனைப் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில், அவரது வீடியோ ஒன்று பதிவாகியிருந்தது தெரியவந்தது.

    அதில், கடந்த 3 மாதங்களாக தனது மனைவி, அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பேச்சைக் கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் மனம் நொந்து துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவி்ததுள்ளார்.

    தனது மரணத்திற்கு மனைவி, அவரது சகோதரி குடும்பத்தினரும் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில், போலீசார் வித்யா குமாரின் மனைவி நிஷா, அவரது சகோதரி உஷா, அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் கொடுமை தாங்க முடியாததால் திமுக பிரமுகர் வீடியோ பதிவு செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: