சட்டப்பேரவை வளாகத்தில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காரில் ஏற முயன்றதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நுழைவாயில் எண் 4 பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கார்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முற்பட்டார்.இந்த வீடியோ சமுக வலைத் தளத்தில் வைரல் ஆனது
தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் முடிந்து நேற்று வெளியேறும்போது, அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோருடன் உதயநிதி உரையாடி வந்தார். அப்போது, 3 நாட்களுக்கு முன்பு தானும் எடப்பாடி பழனிசாமி காரில் ஏற பார்த்ததாகவும்,காரின் முகப்பில் ஜெயலலிதா புகைப்படம் இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டதாகவும் உதயநிதி கூறினார்.
இப்படியே போனால் அருகில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான் என, அமைச்சர் அன்பில் மகேஷ் நகைச்சுவையாக தெரிவித்தார். சமீபத்தில் உதயநிதியின் காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது. இருவரின், கார்களும் ஒரே மாதிரி இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.