Home /News /tamil-nadu /

சென்னை : திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் வெட்டிக்கொலை... காரணம் இதுதானா?

சென்னை : திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் வெட்டிக்கொலை... காரணம் இதுதானா?

சென்னையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், திமுகவின் மடிப்பாக்கம் வட்ட செயலாளர் செல்வம் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் இந்த படுகொலைக்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் செல்வத்தின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    படுகொலையான செல்வம் மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். கோஷ்டி மோதல் ஏதும் இந்த கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி இம்மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: DMK

    அடுத்த செய்தி