சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், மண்டல குழு தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகை மன்ற அரங்கில் தொடங்கியது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் இத் தேர்தல் நடைபெற்றது.
சென்னை மண்டல எண் 1 - திருவொற்றியூர் மண்டலம் மண்டலக்குழுத் தலைவராக திமுக வேட்பாளர் தி.மு. தனியரசு (வார்டு 10) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 2 - திமுக வேட்பாளர் ஏ.வி. ஆறுமுகம் (வார்டு 20 உறுப்பினர்) மண்டலக் குழுத் தலைவராக போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 3 - மாதவரம் மண்டலக்குழு தலைவராக திமுக வேட்பாளர் எஸ். நந்தகோபால் போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 4 - தண்டையார்பேட்டை மண்டலக்குழு தலைவராக நேதாஜி யு.கணேசன் (வார்டு 38 ) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 5 - ராயபுரம் மண்டலத்தின் (வார்டு 54) மண்டலக்குழு தலைவராக திமுக வேட்பாளர் பி.ஸ்ரீராமுலு போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 6 - திரு.வி.க நகர் மண்டலத்திற்கான மண்டலக் குழுத் தலைவராக திமுக வேட்பாளர் திருமதி சரிதா மகேஷ்குமார் (வார்டு 69) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 7 - அம்பத்தூர் மண்டலத்தின் மண்டலக்குழுத் தலைவராக திமுக வேட்பாளர் பி.கே.மூர்த்தி (வார்டு 80) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 8 - அண்ணா நகர் மண்டலம் திமுக வேட்பாளர் கூபி.ஜெயின் ( வார்டு எண் 94) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 9 - தேனாம்பேட்டை மண்டலத்தின், மண்டலக் குழு தலைவராக திமுக வேட்பாளர் எஸ். மதன்மோகன் ( வார்டு 114) போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 10 - கோடம்பாக்கம் மண்டல திமுக வேட்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி (வார்டு 142) மண்டலக் குழுத் தலைவராக போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 11 - வளசரவாக்கம் மண்டலம் திமுக வேட்பாளர் நொளம்பூர் வே.ராஜன் (வார்டு எண்143) மண்டலக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 12 - ஆலந்தூர் மண்டலம் திமுக வேட்பாளர் என். சந்திரன் (166) மண்டலக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 13 - அடையாறு மண்டலம் திமுக வேட்பாளர் ஆர்.துரைராஜ் (வார்டு 172) மண்டலக் குழு தலைவராக போட்டியின்றி தேர்வு.
மண்டலம் 15 - சோழிங்கநல்லூர் மண்டலம் திமுக வேட்பாளர் வி.இ.மதியழகன் (வார்டு 192) மண்டலக்குழுத் தலைவராக போட்டியின்றி தேர்வு.
சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டலங்களுக்கு திமுக வேட்பாளர்களை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்ப்பட்டனர்.
இந்நிலையில், 11 உறுப்பினர்களை கொண்ட பெருங்குடி மண்டலத்திற்கு , திமுக சார்பில் எஸ்.வி. ரவிச்சந்திரன்(வார்டு 184), அதிமுக சார்பில் கே.பி.கே.சதீஷ்குமார்( வார்டு 182)
இருவரும் மண்டல குழுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததால் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது.
Must Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக டெல்லி செல்கிறார்
அனைத்து உறுப்பினர்களும் வாக்கினை செலுத்திய பிறகு அதிமுக உறுப்பினர் கே.பி.கே.சதீஷ்குமார், திமுகவை சேர்ந்தவர்கள் வாக்களிக்கும்போது கையில் அலைபேசி வைத்திருந்ததாகவும் , அவர்கள் யாருக்கு வாக்களித்தோம் என புகைப்படம் எடுத்திருக்க கூடும், இது மறைமுகத் தேர்தலுக்கான விதிகளை மீறிய செயல் என குற்றம் சாட்டியதை தொடர்ந்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி மறு தேர்தல் நடந்தது.
Rerad More : மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்
அதன் முடிவில் திமுக வேட்பாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மொத்தமுள்ள 11 வாக்குகளில், 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எனவே, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.