டீசல் விலை உயர்வால் சட்டீஸ்கர் , மகாராஷ்டிரா, புனே, உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரமுடியாத நிலையாலும். தமிழகத்தில் கோடை விளைச்சல் குறைந்து வரத்து குறைவு காரணமாக
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் திடீரென உயர்வு கிலோ 50 க்கு விற்பனை.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை 1 கிலோ தக்காளி இன்று விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் . வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்த நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து இன்று 45 வாகனங்களில் 600 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது.
சென்னையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி நேற்று முன்தினம் வரை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று நவீன் தக்காளி ரூ 45 க்கும் -நாட்டு தக்காளி ரூ 38 க்கும் ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அத்தியாவசிய காய்கறிகள் 5200 டன் அளவிற்கு வந்துள்ள நிலையில் 1கிலோ எலுமிச்சை 170/160, பீன்ஸ் 70/60,
இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 18/14/12
நவீன் தக்காளி 45நாட்டு தக்காளி 40/35
உருளை 25/18/17சின்ன வெங்காயம் 35/30/25
ஊட்டி கேரட் 40/35/30
பெங்களூர் கேரட் 18/14
பீன்ஸ் 70/60
பீட்ரூட். ஊட்டி /30.25கர்நாடக பீட்ரூட் 15சவ் சவ் 18/16
முள்ளங்கி 12/10
முட்டை கோஸ்12/10
வெண்டைக்காய் 40/30
உஜாலா கத்திரிக்காய் 20/15
வரி கத்திரி 16/12
காராமணி 50
பாவக்காய் 25/20
புடலங்காய் 16/14
சுரக்காய் 15/10
சேனைக்கிழங்கி 18/15
முருங்ககாய் 15/12
சேமகிழங்கு 40/35
காலிபிளவர் 18/15
வெள்ளரிக்காய் 15/15
பச்சை மிளகாய் /30/25
பட்டாணி 160/150
இஞ்சி 60/40
பூண்டு 45/40/30
அவரைக்காய் 45/35
மஞ்சள் பூசணி 15
வெள்ளை பூசனி 15
பீர்க்கங்காய் /30
எலுமிச்சை 170/160
நூக்கள் 15/10
கோவைக்காய் 20/15
கொத்தவரங்காய் 25
வாழைக்காய் 6/5
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய்40/35
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 3
புதினா 2
கருவேப்பிலை 15
அனைத்து கீரை 5
தேங்காய் 30/25
மாங்காய் 13/10
செய்தியாளர்: கன்னியப்பன் , அம்பத்தூர்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.