Home /News /tamil-nadu /

கிரில் சிக்கன்.. ஃபிரைட் ரைஸ்-க்கு கடன் சொன்ன இளைஞர்.. காசு கேட்டதால் கடையை நொறுக்கி ஆவேசம்

கிரில் சிக்கன்.. ஃபிரைட் ரைஸ்-க்கு கடன் சொன்ன இளைஞர்.. காசு கேட்டதால் கடையை நொறுக்கி ஆவேசம்

அம்பத்தூர் ஹோட்டல் தகராறு

அம்பத்தூர் ஹோட்டல் தகராறு

Chennai Hotel Vandalized: ஹோட்டலை வாடகைக்குக் கொடுத்த கட்டட உரிமையாளரே குடிபோதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    அம்பத்தூரில் சாப்பிட்ட கிரில் சிக்கன் மற்றும் ப்ரைட் ரைஸ்க்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட  தகராறில்  ஹோட்டலை சூறையாடிய 3 பேரை பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை அம்பத்தூர் புதூர் மீன் மார்க்கெட் பாண்டியன் தெருவில் அமைந்துள்ளது தி பட்டதாரிஸ் ஹோட்டல். விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 35)  சிங்கப்பூரில் பணிபுரிந்து விட்டு தற்போது  இந்த  அசைவ உணவு கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 27) என்ற இளைஞர் கடைக்கு வந்து கிரில் சிக்கன் மற்றும் சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் பில் தொகையான 230 ரூபாயை கட்டுவதற்கு பணம் இல்லாததால் உணவு சாப்பிட்டதற்கான பணத்தை நாளை வந்து கொடுத்து விடுவதாக கேட்டுள்ளார் கோகுல்.

    Also Read: போலீஸ் யூனிஃபார்மில் வசூல் வேட்டை.. ஆசைவார்த்தை கூறி லட்சங்கள் சுருட்டல் - போலி பெண் எஸ்.ஐ சிக்கியது எப்படி?

    இந்நிலையில் கட்டிட உரிமையாளர் சுரேஷ் என் முதலாளி தானே என ஹோட்டல் நடத்தும் பிரேம்குமாரிடம் கோகுல் பலமுறை கூறியுள்ளார். உடனடியாக சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து விட வேண்டும் எனவும் யார் பெயரை சொன்னாலும் கடன் எல்லாம் கொடுக்க முடியாது  என கராராக கூறியுள்ளார் பிரேம்குமார். இதனால் கோகுலுக்கும் ஓட்டல் உரிமையாளரான பிரேம்குமார் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பணம் கொடுப்பது தொடர்பாக கைகலப்பாகி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கோகுல் உடனடியாக சென்று கட்டிட உரிமையாளர்கள்  சுரேஷ், ராஜேஷ்  ஆகியோரை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்தும் வந்துள்ளார். அதில் சுரேஷ் மற்றும் ராஜேஷ் இருவரும் அதிக அளவு மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்துள்ளனர். இருவரும் கையில் பட்டாக்கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்து ஓட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர். அதில் பில் போடும் இயந்திரம் லேப்டாப் மற்றும் கடையின் கண்ணாடி பெட்டி உணவு சமைக்கும் பாத்திரங்கள் மிண் சாதனங்கள் ஆகியவற்றை சுரேஷ் ராஜேஷ் இருவரும் சேர்ந்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக பிரேம்குமார் உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் நேரில் வந்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

    Also Read: வனத்துறையினரை கண்டித்து மக்கள் போராட்டம்.. விவசாய பணிகளுக்கு செல்ல தடை விதித்ததால் கொந்தளிப்பு.

    புகாரைப் பெற்றுகொண்ட அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு போலீசார் ஹோட்டல் கட்டிடத்தின் உரிமையாளரான சுரேஷ், ராஜேஷ்  மற்றும் அவரிடத்தில் பணிபுரியும் கோகுல் (வயது 27) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் மூவரும் நடந்த பிரச்னை தொடர்பான உண்மையை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது  தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்தல், கையால் அடித்து காயத்தை ஏற்படுத்தல், ஆயுதம் கொண்டு தாக்கி காயம் ஏற்படுத்தல், மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசுதல்,பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட  5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர் அம்பத்தூர் காவல் துறையினர்.

    செய்தியாளர்: கன்னியப்பன் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BBQ Chicken, Chicken, Crime News, Hotel Food, Money, Police

    அடுத்த செய்தி