முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். 89 வயதான இவர் வயது மூப்பின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Must Read : மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
அவருக்கு, மருத்துவமனையின் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல் நலம் பெற்று இன்று மாலை 4.38 மணிக்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.