Home /News /tamil-nadu /

அச்சுறுத்தும் அசானி புயல்... சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து

அச்சுறுத்தும் அசானி புயல்... சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து

கோப்புப் படம்

கோப்புப் படம்

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து

    ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம்,
    ஹைதரபாத்,மும்பை, ஜெய்பூா்க்கான 10 விமானங்கள்
    இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தீவிர புயல் அசானி, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து இன்று இரவு வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொள்ளும்.

    அதன்பிறகு திசையில் மாற்றம் ஏற்பட்டு வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வட மேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை 10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 10:40 மணிக்கும், பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மிரட்டும் அசானி புயல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


    ஏா் ஏசியா விமான நிறுவனம் சென்னையிலிருந்து ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள், அதைப்போல் ஹைதராபாத்,ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் 3 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

    மேலும் படிக்க: நள்ளிரவில் சென்னையை குளிரவைத்த கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்!


    இதையடுத்து அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்களை பயணிகளுக்கு  விமான நிறுவனங்கள் நேற்று மாலையே கொடுத்துவிட்டதால், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து அவதிப்படவில்லை.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Airport, Cyclone Asani, Flight

    அடுத்த செய்தி