மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்..

Youtube Video

கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதித்த தடையை நீக்கியதால் மெரினா கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.

 • Share this:
  பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை மெரினா கடற்கரையில் கூடிய மக்கள் கூட்டம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதித்த தடையை நீக்கியதால் மெரினா கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.

  கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள், சென்னையில் உள்ள முக்கிய கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்ததால், கடந்த திங்கள் முதல் அந்த தடை நீக்கப்பட்டது.

  4 மாதங்களுக்கு பிறகு கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் அதிகளவில் மெரினா கடற்கரைக்கு மக்கள் வருகிறார்கள்.

  Also read: சென்னையில் வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

  மெரினா கடற்கரையில் திரளும் மக்கள் ஒரே இடத்தில் கும்பலாக கூடி வருகிறார்கள். கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் கவனமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இன்று ஏராளமானோர் மெரினாவில் கூடினர். இதனால், அதிகாலை முதல் மெரினா கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. ஒரு பக்கத்தில் குதிரை சவாரி செய்தும், சிறுவர்கள் கிரிகெட் விளையாடியும் மகிழ்ந்தனர். பெரியர்கள் சிறிவர்கள் என குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு வர துவங்கினர். குடும்பத்தோடு வருபவர்கள் மதிய உணவும் மெரினா கடற்கரையில் உண்டு மகிழ்ந்தனர்.

   

  இதனால், பல மாதங்களாக வெறிச்சோடி கிடந்த சென்னை மெரினா கடற்கரை தற்பொழுது மக்கள் கூட்டத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: