சென்னை பாஜக அலுவலத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பாஜக அலுவலத்தில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசிய கருக்கா வினோத் காசுக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். 2015 ம் ஆண்டு தி.நகர் சவுத் போக் சாலையில் டாஸ்மாக் கடையில் எரியும் துணியை உள்ளே தூக்கிபோட்டு பின் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை டாஸ்மாக்கினுள் ஊற்ற டாஸ்மாக் கடை முழுவதும் எரிந்து ஊழியருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் வி.சி.கே தலைவர் தொல்.திருமாவளவன் மது ஒழிப்பு போராட்டம் செய்துகொண்டிருந்த சமயம். அப்போது வி.சி.கே பிரமுகர் ஒருவர் தலைவரின் போராட்டத்த்தை வீரியப்படுத்த வேண்டும் எனக்கூறி கருக்கா வினோதுக்கு ரூ.200 பணமும் மதுவும் வாங்கி கொடுத்ததும் அதன் பேரிலேயே கருக்கா வினோத் டாஸ்மாக் கடையை எரித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் கருக்கா வினோத் மற்றும் வி.சி.க பிரமுகர் இருவரும் மாம்பலம் போலீசாரால் அப்போது கைது செய்யப்பட்டனர்.
2017 ம் ஆண்டு கருக்கா வினோத் இரு சக்கர வாகனத்தில் வந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைதானார். அப்போது தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி ஒருவர் "போலீசார் நம்மை வாழவிடமாட்டார்கள். அவர்களுக்கு நம் மேல் பயம் வரவேண்டும்" எனக்கூறி பணம் கொடுத்து பெட்ரோல் வெடிகுண்டு வீசச்செய்ததும். அதன் பேரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதும் தெரியவந்தது.
தற்போது பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் இவரை பணம் கொடுத்து யாரேனும் பெட்ரோல் வெடிகுண்டு வீசச்சொல்லியுள்ளனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.