கள்ளக்காதலியால் திருடனான டாட்டூ ஆர்ட்டிஸ்ட்... யூடியூப் பிரபலம் சிக்கியது எப்படி?

Youtube Video

சென்னையில் யூடியூபில் பிரபலமான டாட்டூ ஆர்ட்டிஸ்ட், தனது கள்ளக்காதலிக்கு செலவழிப்பதற்காக வழிப்பறி திருடனாக மாறியுள்ளார்.

 • Share this:
  சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் சுற்றுவட்டாரங்களில் கடந்த மாதம் தொடர் செல்போன் மற்றும் செயின்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் அதிகளவில் புகார்கள் குவியவே, தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடத் தொடங்கினர்.

  பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் செல்போன் ஐஎம்ஈஐ எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடிய போது, திருவள்ளூர் அத்திப்பட்டைச் சேர்ந்த 25 வயதான சங்கர் மற்றும் 25 வயதான மனோஜ் ஆகியோர் சிக்கினர்.இருவரிடமும் நடத்திய விசாரணையில் அடிப்படையிலும், செல்போன் IMEI எண் மூலமும் மீஞ்சூரில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான 35 வயதான பவர் வசந்த் என்பவர் சிக்கினார்.

  வடபழனியில் டாட்டூ குத்தும் கடை நடத்தி வந்த பவர் வசந்த், தனது சாதனைகளை யூடியூபில் பதிவிட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்; ஒரு கட்டத்தில் டாட்டூ தொழிலில் பிரபலம் ஆகியுள்ளார். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் வசந்துக்கு வடபழனியை சேர்ந்த பட்டதாரியான 42 வயது மங்களா தேவி எனும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

  இருவரும் தினசரி காரில் ஊர் சுற்றுவது, தியேட்டர் செல்வது, ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது என உல்லாசமாக பொழுதைக் கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் தொழிலில் இருந்து வரும் வருமானம் மங்களா தேவிக்கு செலவு செய்ய போதவில்லை. அதனால் கடந்த சில மாதங்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மற்றும் செயின்பறிப்பில் ஈடுபடத் தொடங்கினார் பவர் வசந்த்.  பவர் வசந்தின் வாக்குமூலத்தின் அடிப்படையி்ல் மங்களாதேவி மற்றும் ஒரு கூட்டாளி வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்; இந்த வழக்கில் பவர் வசந்த், அவரது கள்ளக்காதலி உட்பட 5 பேர் கைதாகியுள்ளனர். அவ்ரகளிடம் இருந்து 15 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பவர் வசந்தின் நண்பர்கள் மீது ஏற்கனவே வண்ணாரப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
  Published by:Vijay R
  First published: