ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாலையில் மாடுகள் திரிந்தால் இரு மடங்கு அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சாலையில் மாடுகள் திரிந்தால் இரு மடங்கு அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மாடுகள் சுற்றித் திரிந்தால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு

மாடுகள் சுற்றித் திரிந்தால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு

2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தமாக 4099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதமாக இதுவரை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுத் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக மாடு ஒன்றுக்கு வசூலித்து வந்த அபராத தொகை ரூ.1550 - யில் இருந்து ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு  அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு 1250 ரூபாய் அபராத தொகை, 100 ரூபாய் ஒரு நாள் விகிதம் 300 ரூபாய் பராமரிப்பு பணி என மொத்தமாக ரூ.1,550/- விதிக்கப்பட்டு வந்தது.

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - காரணம் என்ன?

2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தமாக 4099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதமாக இதுவரை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த அபராதம் ஆனது ரூ.1550 முதல் ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

ஆம்னி பேருந்து கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

இனி வரும் காலங்களில் மாடு பிடிபட்டால் 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும். அதே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Chennai corporation