மாஸ்க் அணியாததால் ரூ.5,000 அபராதம்; எதிர்த்து கேள்வி கேட்டவரின் மூக்கை உடைத்த மாநகராட்சி அதிகாரிகள்!

கடைக்காரர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை அம்பத்தூர் அருகே மாஸ்க் அணியாத அரிசை கடைகாரருக்கு ரூ.5000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி  அதிகாரிகள், எதற்கு அவ்வளவு தொகை என்று கேள்வி கேட்டவரை அதிகாரிகள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  சென்னை அம்பத்தூர் அருகே மாஸ்க் அணியாத அரிசி கடைகாரருக்கு ரூ.5000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி  அதிகாரிகளிடம், எதற்கு அவ்வளவு தொகை என்று கேள்வி கேட்ட கடைக்காரரை அதிகாரிகள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூரை அடுத்துள்ள அத்திப்பட்டு ஐசிஎப் காலனி பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது வழக்கமாக அபராதம்  விதித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் இன்று காலை ஐசிஎப் காலனி பகுதியில் உள்ள திருப்பூர் காட்டன் எனும் தனியார் துணிக்கடை மற்றும் அரிசி கடையில் மாஸ்க் போடவில்லை என்று  இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர். அப்போது அரிசி கடையின் முதலாளி தொகையை குறைத்து போடுமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டார்.

  ஆனால் கறாரான மாநகராட்சி ஊழியர்கள் நாங்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு அபராதம் போட வேண்டும் எங்களுக்கு டார்கெட் உள்ளது என்று கறாராக கூறியுள்ளனர். அரிசி கடை நடத்திவரும் தமிழக வணிகர் பாதுகாப்பு பேரவையின் செயலாளர் லட்சுமணன் என்பவர் அதிகாரிகளுடன் வாதத்தில் ஈடுபடுவதாக தேவராஜ் என்பவருக்கு தகவல் கொடுக்க தேவராஜ் சம்பவ இடத்துக்கு வந்து தொகையை குறைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  இதில் மாநகராட்சி ஊழியருக்கும் கடை முதலாளிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி அரிசி கடை முதலாளியை மாநகராட்சி அதிகாரிகள் அவரின் கடைக்குள் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  தமிழக வணிகர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சௌந்தரராஜன்   சம்பவ இடத்தை பார்வையிட்டு பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை  காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

  சம்பந்தப்பட்ட அம்பத்தூர்  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: