சென்னையில் வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி... முன்பதிவு செய்வது எப்படி?

தடுப்பூசி

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

 • Share this:
  382-வது சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். ரோட்டரி சங்கம் உதவியுடன் முதற்கட்டமாக 15 மண்டலங்களுக்கு தலா ஒரு வாகனம் என மருத்துவக்குழு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதற்காக 044- 25384520, 044 - 46122300 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Also read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்... 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களே தேர்வு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்ய 044- 25384520, 044 - 46122300 என்ற தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

  Also Read : பள்ளி திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்க - முன்னாள் அமைச்சர்

  முன்பதிவு செய்த பிறகு ஒரு செவிலியருடன் கூடிய மருத்துவக்குழு கார் மூலம் வீடு தேடி செல்கிறது. தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும், முதற்கட்டமாக 15 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப கூடுதல் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: