Home /News /tamil-nadu /

சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 4% ஆக குறைவு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 4% ஆக குறைவு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அண்ணா நகர், அடையாறு கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.  

அண்ணா நகர், அடையாறு கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.  

அண்ணா நகர், அடையாறு கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 4% ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
அண்ணா நகர், அடையாறு, கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

அண்ணா நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,146 ஆகவும், அடையாறு மண்டலத்தில் 1,134 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,115 நபர்களும் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also read: சென்னையில் குறையும் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் சராரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் நேற்று மட்டும் சென்னையில் 31,125 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 1,223 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 4% ஆக குறைந்துள்ளது.

சென்னையில் சென்ற மே மாதம் 10ம் தேதி 26.6% ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மே மாத இறுதியில் 5.9% ஆகவும், அது மேலும் குறைந்து தற்போது 4% ஆக குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 52 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 184 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 210 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் மட்டும் இதுவரை 7,658 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680  நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai, CoronaVirus, COVID-19 Second Wave

அடுத்த செய்தி