மருத்துவமனை கொரோனா நோயாளி தற்கொலை.. ஆக்சிஜன் வழங்காததால் மாடியில் இருந்து குதித்ததாக உறவினர்கள் புகார்..

Youtube Video

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:
  சேலையூரைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு அண்மையில் கொரோனா உறுதியானதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளியை வேரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், ஒருநாள் மட்டும் இங்கேயே இருக்கட்டும் என உறவினர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

  இந்நிலையில் இன்று காலை உறவினர்கள் வீட்டிற்குச் சென்ற நிலையில், ராஜேந்திரன் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆக்சிஜன் வழங்காததால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  மேலும் படிக்க...  3 முறை தொற்று.. மன உறுதியுடன் இருந்து கொரோனாவை வென்ற பெண்...!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  -----------------------------------------------------------------------------------------------

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: