சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாதிரி படம்

மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

  • Share this:
    சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 26-ம் தேதி, ஆயிரத்து 551 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஆயிரத்து 802-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு வார காலத்தில் குணமடைவோரைவிட கூடுதலாக 251 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

    மண்டல அளவில் பார்க்கும்போது, திருவொற்றியூரில் கடந்த 26-ம் தேதி 50 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2-ம் தேதி 63-ஆக அதிகரித்துள்ளது.மணலியில் 33-ஆக இருந்த பாதிப்பு, 31-ஆகக் குறைந்துள்ளது.

    Also Read : ரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

    மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் அதிகரித்துள்ளது. அண்ணா நகர், வளசரவாக்கம் பகுதிகளில் சிறிதளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மணலி, அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,44,903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் மலேசியா நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவர்.

    Also Read : மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை

    இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,65,452 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,047 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,11,076 பேர் வீடு திரும்பியுள்ளனர். 20,217 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 23 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்  உயிர் இழந்துள்ளனர்.  இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 34,159 ஆக உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: