• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் மீண்டும் உருவாகும் கொரோனா கிளஸ்டர்கள்

சென்னையில் மீண்டும் உருவாகும் கொரோனா கிளஸ்டர்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

Corona Virus Update | சென்னையில் மீண்டும் கொரோனா கிளஸ்டர்கள் உருவாகி வருகின்றன.

  • Share this:
    சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் விடுதியில் 13 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. விடுதி மாணவர் ஒருவருக்கு முதலில் அறிகுறிகள் தென்பட்டன. அவர்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தன்னை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா பாசிடிவ் என்று உறுதியானது. அதை தொடர்ந்து சென்னை மாநக்ராட்சி விடுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே மாணவர்கள் தங்கியிருந்த அறைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் சித்தா கொரோனா பராமரிப்பு மையத்தில் உள்ளனர்.

    Also Read : குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! - எதுக்குனு தெரியுமா?

    அதே போன்று விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முதலில் அங்குள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 30 மாதிரிகளில் மேலும் எட்டு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    இதில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருவர். ஒன்பது பேரில் நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஒருவர் ஒரு டோஸ் செலுத்தியுள்ளார், இருவர் தடுப்பூசி செலுத்தவில்லை. ஒன்பது பேரில் எட்டு பேர் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள். அனைவரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: