Home /News /tamil-nadu /

பெரியார் திடலில் வைதீக திருமணம்... அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டிய கே.எஸ்.அழகிரி

பெரியார் திடலில் வைதீக திருமணம்... அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டிய கே.எஸ்.அழகிரி

சேகர் பாபு - கே.எஸ்.அழகிரி

சேகர் பாபு - கே.எஸ்.அழகிரி

KS Alagiri praised Sekar Babu | தாங்கள் நினைத்ததை விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக திறமைசாலியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 15 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்று 15 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தனர்.

பின்னர், மேடையில் பேசிய அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மணமக்கள் அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் போல் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, கே.எஸ்.அழகிரி தொட்டதெல்லாம் துலங்குகிறது விளங்குகிறது எனவும்அ வர்  தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க உதவியதாக புகழ்ந்தார்.
எனவே, இந்த திருமணத்தை அவர் நடத்தி வைத்தால், இந்த திருமணமும் வெற்றி பெரும் என்பதால் அவரை அழைத்து இந்த திருமணத்தை நடத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய கே.எஸ்.அழகிரிநாங்கள் நினைத்ததை விட முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் திறமைசாலியாக உள்ளதாகவும்
சேகர் பாபுவை போன்று செயலாற்ற கூடியவரை தமது அமைச்சரவையில் ஸ்டாலின் வைத்துள்ளதாகவும் புகழ்ந்தார். பெரியார் திடலில் ஒரு வைதீக திருமணத்தை  சேகர் பாபு நடத்தியுள்ளார். இதை வேறு யாராவது செய்திருந்தால் ஆசிரியர் வீரமணி விடுதலை இதழில் எழுதியிருப்பார். ஆனால் இப்போது அவரால் அப்படி செய்ய முடியாது என கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

Also Read : முதுகுளத்தூர் பகுதியில்அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக போஸ்டர்கள்

இன்றுள்ள அரசியலில் மிக சிறப்பான கொள்கை கூட்டணி காங்கிரஸ் - திமுக கூட்டணி . பாஜக ஆட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் கட்டுபடுத்த விரும்புகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய அரசு துணையாக இருக்கும் காரணத்தால் மக்களது உணர்ச்சிகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கு எதிராக ஆளுநர் நடந்து கொள்வதாக விமர்சித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொள்கை ரீதியாக வளர்ந்ததால் இவற்றை எல்லாம் தகர்த்தெரியக்கூடிய திறமையோடு வல்லமையோடு இருப்பதாக தெரிவித்தார். உட்செயலாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று முதலமைச்சராக அவர் வந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது என கே எஸ் அழகிரி புகழாரம் சூட்டினார். தாங்கள் நினைத்ததை விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக திறமைசாலியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Congress, DMK, KS Alagiri, Minister Sekar Babu

அடுத்த செய்தி