சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்த நபரின் உடலை தூக்கி எடுத்து செல்ல உதவிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தமிழக காவல் துறையில் 21 சதவீதம் பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். காவல் பணியில் சிறப்பாக பணியாற்றிய பெண் காவலர்களும் பெருமைப் படுத்தப் பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பாக இடைக்காலத்தில் ஆய்வாளர் ராஜேஸ்வரி வாலிபர் ஒருவரை தனியாக தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் சர்வதேச அளவில் சென்னை காவல் துறைக்குப் பெருமை சேர்த்தது.இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் இரவு மூர் மார்க்கெட், அல்லிக்குளம் அருகில் புறநகர் இரநில் நிலைய நுழைவு வாயில் அருகில் ஒரு நபர் மயங்கி கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் படி, பெரியமேடு ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏற சென்ற தனியார் மருத்துவர் சோதனை செய்ததில் அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் பிணையில் விடுதலையாவது மகிழ்ச்சி - அன்புமணி ராமதாஸ்
போலீஸ் விசாரணையில் அந்த நபர் அவரது சித்தியுடன் ரயில் நிலையத்துக்கு நடந்து வரும் போது, வலிப்பு வந்து மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் செல்லும் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபருக்கு யாரும் முதலுதவி செய்யாததால் இறந்ததும் தெரிய வந்துள்ளது.
இறந்த நபரை தூக்குவதற்கு கூட யாரும் முன் வராத நிலையில், ரோந்து வாகன பொறுப்பு பெண் காவலர் லீலாஸ்ரீ, தன் சக காவலர் தினேஷுடன் இறந்த நபரை தூக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். உடன் வந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறி போலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இரவு பணியின் போது, இறந்த நபரை தூக்கி வாகனத்தில் ஏற்றி அனுப்பிய பெரிய மேடு பெண் காவலர் லீலாஸ்ரீயின் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா நேற்று பெண்கள் தினத்தன்று லீலாஸ்ரீ அழைத்து பாராட்டி பரிசளித்துள்ளார்.
மேலும் இந்த செயலை பாராட்டி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜி வாலும் பெண்காவலர் லீலாஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.