ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து இந்த வாட்ஸ் ஆப் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.. மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்பு குறித்து இந்த வாட்ஸ் ஆப் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.. மாநகராட்சி அறிவிப்பு

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு ஏற்கனவே அவசர எண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக வாட்சப் எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியார்கள் மீட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு ஏற்கனவே அவசர எண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக வாட்சப் எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மழை, வெள்ளப்‌ பாதிப்பு, மரக்கிளைகள்‌ அகற்றம்‌ தொடர்பான புகார்களை 9445477205, 9445025819, 9445025820 மற்றும்‌ 9445025821 ஆகிய வாட்ஸ்‌ ஆப்‌ எண்களில்‌ தெரிவிக்கலாம்‌.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 07.11.2021 அன்று பெய்த கனமழையின்‌ காரணமாக மாநகரின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள தாழ்வான இடங்களில்‌ மழைநீர்‌ தேக்கம்‌ இருந்து வந்தது. மாநகராட்சியின்‌ சார்பில்‌ மழைநீரை வெளியேற்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன்‌ கட்டட வளாகத்தில்‌ பருவமழை குறித்து கண்காணிக்கவும்‌, பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும்‌, 24 மணி நேரமும்‌ இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக்‌ கட்டுபாட்டு அறையில்‌ 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும்‌, 9445477205 என்ற வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணும்‌ செயல்பட்டு வருகிறது.

மேலும்‌, 5 இணைப்புகளுடன்‌ செயல்பட்டு வந்த 1913 என்கின்ற உதவி எண்‌ தற்பொழுது மழை, வெள்ளத்தின்‌ காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும்‌, 9445025819, 9445025820 மற்றும்‌ 9445025821 என்ற 3 வாட்ஸ்‌ ஆப்‌ எண்கள்‌ கூடுதலாக இன்று முதல்‌ செயல்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ்‌ ஆப்‌ எண்களிலும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ உள்ள மழைநீர்‌ தேக்கம்‌, மரக்கிளைகள்‌ அகற்றுதல்‌ மற்றும்‌ இதரப்‌ புகார்கள்‌ குறித்து தகவல்களை தெரிவிக்கலாம்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai corporation, Chennai flood, Chennai Rain