• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் போலி மருத்துவ உபகரணங்கள் விற்பனை : காவல் நிலையத்தில் புகார்

சென்னையில் போலி மருத்துவ உபகரணங்கள் விற்பனை : காவல் நிலையத்தில் புகார்

போலி பல்ஸ் ஆக்சி மீட்டர்

போலி பல்ஸ் ஆக்சி மீட்டர்

போலியான பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவியை 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வாங்கி ஏமார்ந்ததாக, சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார்.

  • Share this:
    கொரோனாவை பயன்படுத்தி சென்னையில் தொடரும் போலி மருத்துவ உபகரணங்கள் தயாரித்து மொத்த விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அதிகரித்திருப்பதாகவும், பென்சில் மற்றும் பிளாஸ்டிக் பேனா ஆகியவற்றுக்கு ஆக்சிஜன் லெவல், இதயத்துடிப்பை காட்டும் போலியான பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வாங்கி ஏமார்ந்த நபர் சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை பாடி எம்.டி.எச் (MTH Road) ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வினோஜ் குமார். 45 வயதான இவர், தொழிற்சாலை பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  எல்டாம்ஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் மெர்குரி மெடிகல்ஸ் எனும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில், ராகேஷ் குமார் என்பவரிடம் 3000 பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை வாங்குவதற்காக ரூபாய் 10 லட்சத்தை தனது வங்கி கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்துள்ளார்.

    10 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட, ராகேஷ் குமார் 400  சாம்பிள் பல்ஸ் ஆக்சி மீட்டரை மட்டுமே டெலிவரி கொடுத்துள்ளார். ஆனால், இவர் பெற்ற 400 பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளும் போலி  என அவரிடம் பொருட்களை வாங்கி நோயாளிகள் புகார் கொடுத்தனர். இது பற்றி ராகேஷ் குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் ராஜேஷ்குமார்  சரியான பதிலும் அளிக்காததால், பணத்தை திருப்பிக் கொடுத்து விடுமாறும், நீங்கள் கொடுத்த 400 பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

    இதுவரை பணத்தை கொடுக்காமல் 7 மாதமாக அலைகழித்து வந்த நிலையில், இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் வினோஜ்குமார் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் போலியான மருத்துவ உபகரண பொருட்களை வாங்கி ஏமார்ந்ததாகவும், அதை விற்பனை செய்த அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, தான் இழந்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டுத் தருமாறும், போலியான மருத்துவ குணத்தை விற்பனை செய்த அந்த நபரையும் கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    Must Read : விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தமுடியாமல் 3 மணிநேரம் காத்திருப்பு - 6 மாவட்டங்களில் தொடரும் சோதனை

    கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் கொடுத்த புகாருக்கு, செப்டம்பர் மாதம் தான் CSR வழங்கப்பட்டுள்ளது எனவும்  தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தற்போதைய கொரட்டூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில். போலியான மருத்துவ குணத்தை விற்பனை செய்த நபர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    செய்தியாளர் - கன்னியப்பன், சென்னை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: