அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் அண்ணாநகர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். அப்பொழுது அண்ணாநகரில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவிகளும் அங்கு வந்தபொழுது, அந்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர், அருகில் நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு படித்து வரும் மற்றோரு கல்லூரி மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் இருவர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டனர். தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு, அவர்கள் இருவரும் மோதி கொண்டு சண்டையிட்டு கொண்டதை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அவை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இரு மாணவிகளுக்கு இடையே காதல் பிரச்சினை விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதுதொடர்பாக கல்லூரி நிர்வாகமும் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
Must Read : உதவி பேராசியர் மீது பாலியல், தீண்டாமை புகார்.. ஆதரவாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை
இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஆவடி பேருந்து நிலையத்தில் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்பொழுது இந்த வீடியோவும் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.