சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் 19 வயதுடைய தீபலட்சுமி; செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி (19) இவர்கள் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துவருகின்றனர். இந்த மாணவிகள் இருவரும் தடகள விளையாட்டு வீராங்கனைகள்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி, மாலை இவர்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக பெரம்பூருக்கு மின்சார ரயிலில் சென்றனர். இருவரும் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது, அவர்களுக்குப் பின்னால் நடந்து வந்த ஒருவர், காயத்ரியின் செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவிகள் இருவரும் செல்போன் திருடனை துரத்தத் தொடங்கினர். அப்போது சிறிது தூரத்திற்கு முன்னால் திருடனின் கூட்டாளி பைக்கில் தயாராக நின்று கொண்டிருந்திருக்கிறார். அதை கவனித்த மாணவிகள், “திருடன், திருடன்” என்று சத்தம் போட்டபடி வேகமாக விரட்டினர். அந்த மாணவிகள் சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள், ஓடிக்கொண்டிருந்த செல்போன் திருடனைச் சுற்றிவளைத்தனர்.
அப்போது, மாணவிகளின் பிடியில் திருடன் சிக்கிக்கொண்டான். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவனிடமிருந்த செல்போனை மீட்ட மாணவிகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரவள்ளூர் போலீசார் செல்போனைப் பறித்த வழக்கில் கார்த்திக் மற்றும் அவரின் கூட்டாளி சூர்யா ஆகியோரைக் கைது செய்தனர்.
Must Read : கறிசோறு கொஞ்சம் காரம் - நரிக்குறவர் மாணவி வீட்டில் உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், காயத்ரி மற்றும் தீபலட்சுமி ஆகிய இரண்டு மாணவிகளின் துணிச்சல் மிகுந்த இந்தச் செயலை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் நேரில் அழைத்து பாரட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.