• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அசல் சான்றிதழ்களை திருப்பி தர ரூ.8 லட்சம் கேட்ட தனியார் மருத்துவக்கல்லூரி: மாணவி புகார்!

அசல் சான்றிதழ்களை திருப்பி தர ரூ.8 லட்சம் கேட்ட தனியார் மருத்துவக்கல்லூரி: மாணவி புகார்!

தனியார் பள்ளியில் படிப்பை முடித்த அவருக்கு குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் நான்கரை ஆண்டு படிப்பான பிசியோதெரபி படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது

  • Share this:
அசல் சான்றிதழ்களை திருப்பி தருவதற்கு ரூ.8 லட்சம் கேட்பதாக
தனியார் கல்லூரி மீது மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி இந்த ஆண்டு பிசியோதெரபி படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் கல்லூரியின் கட்டணத்தை செலுத்த இயலாததால் சேர்க்கையை ரத்து செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

அதனை மறுத்த நிர்வாகம், எட்டு லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே அவரது கல்வி அசல் சான்றிதழ்களை திருப்பி தர முடியும் என தெரிவித்துள்ளதாக புகார் எழுப்பியுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த மாணவி காயத்ரி 2019-20ம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். தனியார் பள்ளியில் படிப்பை முடித்த அவருக்கு குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் நான்கரை ஆண்டு படிப்பான பிசியோதெரபி படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. காயத்திரி கல்லூரி சேர்க்கையின் போது பள்ளி மதிப்பெண் அசல் சான்றிதழ்களை நிர்வாகம் பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயியான காயத்ரியின் தந்தை கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாது என மகளிடம் தெரிவித்துள்ளார். எனவே சேர்க்கையை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதை கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக மாணவி காயத்ரி கூறுகிறார். “ மூன்று நாட்கள் வகுப்புக்கு சென்றேன். அதற்குள் கட்டணம் செலுத்த இயலாது என தந்தை தெரிவித்ததால் நிர்வாகத்திடம் தெரிவித்தேன். எனது அசல் சான்றிதழ்களை கேட்டேன். 8 லட்சம் கட்டினால் தான் அசல் சான்றிதழ்களை திருப்பி தருவதாக தெரிவித்தனர். எங்களிடம் பணம் இல்லை. சான்றிதழ்கள் இல்லாமல் வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது” என்றார்.

எனவே கல்லூரி மீது மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் மாணவி காய்த்ரி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுத்து வரும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறுகையில், “மாணவர்கள் தங்கள் சேர்க்கையை ரத்து செய்ய விரும்பினால் விதிகள் படி ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மாணவியின் குடும்ப சூழல் பொருத்து அது குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

இது குறித்து மாதா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: