Home /News /tamil-nadu /

திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை நிலையங்களில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை.. அதிரடி ஆஃபரும் அறிவிப்பு

திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை நிலையங்களில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை.. அதிரடி ஆஃபரும் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதையடுத்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனத்தை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு  வந்துள்ளன. இந்த இரண்டு  ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனத்தை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்களில் சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இம்மாதம் 11.03.2022ஆம் தேதி மட்டும் 2 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்


     மேலும், ‘சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கம் திட்டம் நிறைவேற்றி 54.41 கி.மீ தூரத்திற்கு அதன் இயக்கம் தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: கபாலீஸ்வரர் கோயில் பெருவிழா: சென்னையின் முக்கிய இடங்களில் 15,16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்



    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும். இந்த மைல் கல்லையும் தாண்டி புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். இந்த சாதனை தொடர ரெயில் பயணிகளின் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும்’ என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி