ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

தற்கொலை செய்துக்கொண்ட மாணவி

தேர்வு எழுத முடியாமல் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜான்சிராணி. இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு தனது கணவன் இறந்து விட்டதால் 11-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஸ்டெபினாவுடன் தங்கியுள்ளார். மகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.  மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கையில் அடிபட்டதாக கூறப்படுகிறது.

  Also Read: சிக்னலில் நின்ற கார்.. காதல் ஜோடி அலறல் சத்தம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

  இந்நிலையில் அடிபட்ட இடத்தில் நேற்று வழி அதிகமாக இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தனது அம்மாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு உடல் நிலை சரியில்லாத விவரங்களை கூறியுள்ளார். ஜான்சிராணியும் இரவு நேர உணவை வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் நேற்று இரவு பணியிலிருந்து ஜான்சிராணி வீட்டிற்கு வருவதற்கு முன்பு தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது தொலைபேசியை எடுக்காததால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு ஜான்சிராணி தகவல் தெரிவித்துள்ளார்.

  தகவல் அறிந்த உறவினர்கள் வீட்டில் சென்று பார்க்கும் பொழுது வீட்டின் உட்புற கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் பொழுது மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் காவல் நலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.

  Also Read: ஃபேஸ்புக் நண்பனால் வந்த வில்லங்கம்.. ஷாக்கான பெண் - போலீஸ் விசாரணையில் அம்பலம்

  இச்சம்பவம் தொடர்பான ஆர்கே நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடிபட்ட கையில் ஏற்பட்ட வலியாலும் மேலும் தேர்வு எழுத முடியாமல் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் மனஉளைச்சலில் மாணவி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டினுள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  செய்தியாளர் : அசோக்குமார்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai, Commit suicide, Crime News, School student, Tamilnadu