Home /News /tamil-nadu /

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

யஸ்பால்

யஸ்பால்

ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் மாவட்டம் சத்துலவாஸ் கிராமத்தை சேர்ந்த பல்தேவ் ராம் என்பவரது மகன் யஸ்பால். இவா் 2017ம் ஆண்டில் மத்திய தொழிற்படை போலீஸ் பணியில் சோ்ந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    காதல் தோல்வியால் சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளை மத்திய தொழிற்படை போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் மாவட்டம் சத்துலவாஸ் கிராமத்தை சேர்ந்த பல்தேவ் ராம் என்பவரது மகன் யஸ்பால்(வயது 26). இவா் 2017ம் ஆண்டில் மத்திய தொழிற்படை போலீஸ் பணியில் சோ்ந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில் பணியில் இருந்தாா். அப்போது விமான பகுதியான நுழைவு 19 அருகே உள்ள விமான நிலைய கழிப்பறைக்குள் சென்றார். இவர் சென்றதும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த தூய்மை பணியாளர், ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது யாஸ்பால் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே வலது பக்க நெற்றியில் சுட்டுகொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய போலீசாா் ஆகியோருக்கு தகவல் தரப்பட்டது. விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் அர்னல்டு ஈஸ்டர், இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை
    அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also read... வலிமை ரிலீஸ் திரையரங்கு வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - இளைஞர் கைது

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. யாஸ்பால் கடந்த மாதம் விடுமுறையில் ராஜஸ்தானில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். விடுப்பு முடித்து விட்டு கடந்த 3 தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். கொரோனா நடைமுறை காரணமாக 2 நாள் தனிமைப்படுத்தி கொண்டு காலை பணிக்கு வந்து உள்ளார். யாஸ்பால் தனது ஊரில் ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். அந்த பெண்ணிற்கு 4-ம் தேதி திருமணம் என கூறப்படுகிறது. ஆனால் பெண்ணின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் திருமணம் தள்ளி போனதாக கூறப்படுகிறது.

    காதலிக்கு திருமணம் என்பதால் மனமுடைந்த யாஸ்பால் சென்னை வந்தும் சோகமாக இருந்து உள்ளார். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்ததால் கைத்துப்பாக்கியுடன் பணிக்கு வந்த யாஸ்பால் மன அழுத்தில் இருந்ததால் கழிவறைக்கு சென்று தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai Airport, Suicide

    அடுத்த செய்தி