“சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறப்பு..!
“சின்னக் கலைவாணர் விவேக் சாலை” பெயர் பலகை திறப்பு..!
விவேக் சாலை திறப்பு
Chinna Kalaivanar Vivek Salar: சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு லட்சமாவது மரத்துக்கு விவேக் மரம் என பெயர் சூட்டுவேன். - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் பத்மாவதி சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர்ப் பலகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் , துணை மகேஷ் குமார் , விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா , திரைப் பிரபலங்கள் பொன்வண்ணன் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா , தாடி பாலாஜி , நடிகர் தாமு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். விவேக் மனைவி அருட்செல்வி உட்பட அவரது குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், விவேக் எனக்கு நீண்ட நாள் நண்பர். அவர் கட்டவுள்ள ஹோட்டல் கட்டுமான பணிகள் தொடங்கி வைக்க அழைத்தார். ஆனால் நான் அது போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதில்லை என கூறினேன். அவர் அதற்கான ஆவணங்களை எல்லாம் என்னிடம் கொண்டு வந்து காட்டி எனக்கு அவப்பெயர் வராது என கூறினார். அதன் பிறகு தான்நிகழ்வுக்கு சென்றேன்.
சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு லட்சமாவது மரத்துக்கு விவேக் மரம் என பெயர் சூட்டுவேன். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் தடுப்பூசி தயக்கம் நிலவியது. அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவர் தடுப்பூசி செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.