தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும்
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தக காட்சியை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைத்தார்.
இந்த புத்தக காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட இருந்த புத்தக காட்சி, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில், புத்தக்காட்சி விழா மேடையில் பேசிய முதலமைச்சர், சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பபாசி புத்தக்காட்சியை நடத்த வேண்டும் அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்று கூறினார்.
மேலும், திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம் என்றும், திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம் என்றும் கூறிய அவர், ஆண்டாண்டுகளாக அடிமைபடுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவி இயக்கம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
Must Read : எடப்பாடி பழனிசாமி போல கூவத்தூர் போய் திமுக ஆட்சியை பிடிக்கவில்லை... உதயநிதி அதிரடி பேச்சு
அத்துடன், மாநிலத்தின் அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர், அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்திடுவது கோப்புகளை தமிழில் எழுதுவதை அரசு ஊக்குவித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.