Home /News /tamil-nadu /

கல்வி கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை: சென்னையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை: சென்னையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்ற பொழுது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் தங்களுக்கு அரசு கட்டணமாக மாற்றி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்பொழுது அரசாணையை மாற்றி அமைத்து உள்ளதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    சிதம்பரம் ராஜா முத்தையா தனியார் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்து அதில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்று 2021ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை 45 இல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தற்போது பயின்றுவரும் மருத்துவ மாணவர்களுக்கும் புதிதாக சேரக்கூடிய மருத்துவ மாணவர்களுக்கும் அரசு கட்டணமே வசூலிக்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழக அரசு ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து புதியதொரு அரசாணை வெளியிட்டது. அந்த அடிப்படையில் புதிதாக சேரக்கூடிய மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே அரசு கட்டணம் விதிக்கப்படும் மற்ற இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தனியார் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக அரசு கல்லூரியாக மாற வேண்டும், அரசு கட்டணம் வேண்டும் என்று போராடிய மாணவர்களுக்கு அந்தப் பலன் கிடைக்காமல் தொடர்ந்து தனியார் கல்லூரியில் படிப்பது போல கட்டணம் செலுத்த கூடிய சூழல் இருப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்ற பொழுது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தங்களுக்கு அரசு கட்டணமாக மாற்றி அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்பொழுது அரசாணையை மாற்றி அமைத்து உள்ளதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எப்படியும் அரசு கல்லூரியாக மாறும் என்ற நம்பிக்கையில் கடலூர் அரசு கல்லூரியை தேர்ந்து எடுத்ததாகவும் ஆனால் தொடர்ந்து தனியார் கட்டணமே வசூலிக்கப்படும் என்ற நிலையில் இருப்பதாகவும் இதனால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ALSO READ |  போடாத ரோட்டுக்கு பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்.. ஆளுநரிடம் புகார் அளிக்க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முடிவு
     இதேபோல் தனியார் கட்டணத்தை செலுத்த வற்புறுத்தி வருவதாகவும் கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக தேர்வு எழுதவிடாமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும் அதேபோல முதலாம் ஆண்டு தேர்வின் தேர்வு முடிவுகளை  வெளியிடாமல் வைத்திருப்பதாகவும் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கல்லூரிக்கு வெளியில் நிறுத்தும் அவல நிலை உள்ளதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 400க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டு முதல்வருக்கு கோரிக்கையை வைத்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Medical Students

    அடுத்த செய்தி