முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai : சென்னையில் விலாசம் கேட்பது போல் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :

சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து விலாசம் கேட்பதுபோல் பாலியல் சீண்டல் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் கடந்த 10-ம் தேதி வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் இளம்பெண்ணின் அருகே வாகனத்தை நிறுத்தி மடிப்பாக்கம் செல்ல விலாசம் கேட்பதுபோல் கேட்டுள்ளார். வழி சொல்லிக்கொண்டிருந்த வேலையில் திடீரென பெண்ணின் உடலில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மயங்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றான். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் நடந்தது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சுமார் 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் இளம்பெண்ணிடம் விலாசம் கேட்பதுபோல் நாடகமாடி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சென்னை பள்ளிக்கரணை, ராம் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரை கைது செய்தனர்.

Also Read: கோவை பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம்.. ஊழியரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது 20 வயதான இவர் கட்டிட வேலை செய்து வந்ததும், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்லும்போது விலாசம் கேட்பதுபோல் பாலியல் சீன்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Also Read: பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசம்.. சைக்கோ திருடனின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி

சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

top videos

    செய்தியாளர்: ப.வினோத் கண்ணன்

    First published:

    Tags: CCTV Footage, Chennai, Crime | குற்றச் செய்திகள், Sexual abuse, Sexual harassment