மின்சார ரயிலில் பெண் முன்பு ஆபாசமாக நடந்த நபர் கைது தாம்பரம் இருப்பதை போலீசார் அதிரடி நடவடிக்கை
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவர் கடந்த 9ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் 2 பெண்கள் இருந்துள்ளனர் . அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக்கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ எடுத்து அந்த ஆண் நபரை திட்டி சத்தம் போட்டுள்ளார்.
இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையத்து ரேணுகா வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதுகுறித்து ரேணுகா தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த இருப்புப்பாதை போலீசார் தனிப்படை அமைத்து ரயிலில் பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்த நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் 23 என்பவரை கைது செய்து ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். லட்சுமணன் ரயிலில் பெண்கள் முன் ஆபாசமான நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.