தன்னைத் திருமணம் செய்யும்படி தொடர் தொந்தரவு கொடுத்த கல்லூரிப் பணியாளரை, முன்னாள் காதலி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளார்.
பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் துரத்திச் சென்றனர்.சிறிது துாரத்தில் ஒரு சிறிய பாலத்தருகே அவரை வழிமறித்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்திலின் மார்பு கழுத்து முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் வாகனத்துடன் பாலத்துக் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து விழுந்து செந்தில் உயிரிழந்தார். அதிக போக்குவரத்து உள்ள அந்த சாலையில் பட்டப்பகலில் இந்தப் படுகொலையை நிகழ்த்திய இளைஞரும் இளம்பெண்ணும் வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றபோது பொதுமக்கள் பிடித்துக் கொண்டனர்.
கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின
சென்னைப் புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த இளம்பெண் தனது படிப்பை முடித்த போது அவருக்கும் செந்திலுக்கும் காதல் ஏற்பட்டது. இளம்பெண் வேறொரு கல்லூரியில் தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்த போது, செந்திலுக்குத் திருமணமாகி விட்டது. அதனால் இளம்பெண் செந்திலிடம் இருந்து விலகி இன்னொரு இளைஞரைக் காதலிக்கத் தொடங்கினார்.
Also Read: சன்னிலியோனுக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு.. அப்படி என்ன நிகழ்ச்சி அது?
இதையறிந்த செந்தில், தான் பணியாற்றிய கல்லூரியில் இருந்து விலகி இளம்பெண் படித்து வந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தார். அதன்பின், தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என இளம்பெண்ணுக்கு தொடர் தொந்தரவுகள் கொடுத்து வந்தார். இளம்பெண் மறுத்தும் செந்திலின் தொந்தரவுகள் தொடர்ந்ததால் காதலன் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார் இளம்பெண்
அதன் அடிப்படையில் வியாழக்கிழமை செந்திலிடம் பேசுவது என்றும் அவர் விலகி விட்டால் விட்டு விடலாம் என்றும் அடம்பிடித்தால் கொலை செய்து விடுவது என்றும் திட்டமிட்டு இருவரும் கத்தியுடன் சென்றதாகப் போலீசார் கூறுகின்றனர்அதன் தொடர்ச்சியாகத் தான் செந்தில் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இளம்பெண்ணையும், அவரது காதலனையும் கொலை வழக்கில் திருப்போரூர் போலீசார் கைது செய்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Love, Love issue, Murder