Home /News /tamil-nadu /

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கை குழந்தையுடன் பெண் புகார்..

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கை குழந்தையுடன் பெண் புகார்..

பண மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்

பண மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்

மோசடி நபர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

  சென்னை எர்ணாவூர் காவல்நிலைய குற்றப்பிரிவு  ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் கை குழந்தையுடன் வந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்.

  சென்னை, எர்ணாவூர், ஆல் இந்திய ரேடியோ நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 37). இவர் பி.இ பட்டதாரி ஆவார். இவர்களுக்கு 7மாத கை குழந்தை உள்ளது. இவர்களுடன் சரஸ்வதியின் தந்தை தங்கராஜ் என்பவரும் வசித்து  வருகிறார். இந்நிலையில்,  சரஸ்வதி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து புகார் ஒன்றை  அளித்துள்ளார்.

  Also Read: வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

  அந்தப்புகாரின், “  நான், எனது கணவர், தந்தை மற்றும் கை குழந்தையுடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் மாற்றுதிறனாளி என்பதை  பயன்படுத்தி பணம் மோசடி செய்துள்ளனர். இதனை அறிந்து, மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எண்ணூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன்.போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  மேலும் எனது புகாருக்கு ஏற்பு சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) கூட தரவில்லை. நான் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், மாற்று திறனாளி கணவர், வயதான தந்தை ஆகியோரை அழைத்து கொண்டு மேற்கண்ட காவல் நிலையத்தில் 3மாடி ஏறி சென்று புகார் அளித்தும், இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி எங்களை மிக மோசமாக நடத்துவதாகவும் , அவர் ஒருமையிலும் பேசி அவமதிப்பதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர் மேலும்  நீ கொடுத்த முகவரியில் அவர்கள் இல்லை, நீயே உன்னை ஏமாற்றியவர்களை  கண்டுபிடித்து அழைத்து வா, நாங்கள் விசாரிக்கிறோம் என கூறுகிறார்.

  Also Read: பொங்கல் தொகுப்பில் பல்லி.. புகார் கூறியவர் மீது வழக்கு - மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு

  குறிப்பாக, மலர்மணி என்பவர் மீது நான் கொடுத்த மோசடி புகாருக்கு 7 மாதமாக காவல்நிலையத்திற்கு அலைந்து திரிந்து வருகிறேன். மோசடி நபர் இரு முறை முகவரி மாற்றி சென்று விட்டார். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறோம். மற்றொரு புகாரான "வீடு லீஸ்" சம்பந்தமாக இரண்டு தடவை குற்றவாளிகளை பிடித்து கொடுத்தும், அவர்கள் குடும்பத்தோடு தப்பிக்க விட்டு விட்டு, திரும்பவும் எங்களை தேட சொல்கின்றனர்.

  எங்கள் உயிருக்கு  ஆபத்து என்றால்  மூலக்காரணம், எண்ணூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசாரும் தான். எங்களை கொலை செய்வதாக மிரட்டும் மலர்மணியையும் அவர்களுடன் வந்தவர்களும் போலீசார் முன்னிலையில் எங்களை மிரட்டுகிறார்கள். இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும், போலீசார் எங்களிடம்,  அவர்கள் ஆட்களை வைத்து உன்னை தீர்த்து கட்டினால், உனக்கு கேட்பதற்கு கூட ஆட்கள் இல்லை என்று கூறுகின்றனர்.

  மேலும், போலீசார் மலர்மணியை தப்பவிட்டு உள்ளனர். இது தொடர்பாக நான் கேள்வி கேட்டதால், இரண்டு தடவை வீட்டிற்கு போ என்றும், மலர்மணி வந்து விட்டால் வா என்று கூறி என்னை அலைக்கழித்து வருகின்றனர். மேலும், காவல் நிலையத்தில் மாடி ஏறி அலைந்ததில்,  எனது வயிற்றில் மகப்பேறு காலத்தில் போட்ட தையல் பிரிந்து விட்டது. மாற்று திறனாளியான எனது கணவரையும், கைக்குழந்தையுடன் இருக்கும் என்னையும், வயதான எனது தந்தையையும் போலீசார் கீழ்த்தரமாக நடத்துகின்றனர்.

  மோசடி நபர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும். எனது குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்”என புகார் மனுவில்  கூறியுள்ளார்.இதனை பெற்று கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, சரஸ்வதி அங்கிருந்து குடும்பத்தினருடன் போலீசாருக்கு நன்றி கூறி சென்றார்.

  செய்தியாளர்: கன்னியப்பன்
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cheating case, Chennai, Crime | குற்றச் செய்திகள், Woman

  அடுத்த செய்தி