வணிகர்களுக்கு அரசு அதிகாரிகளால் தொல்லை ஏற்படுகிறது: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேதனை!

தமிழகம் முழுவதும் கொரோனா காலத்திலும் வணிகர்களுக்கு அரசு அதிகாரிகளால் அதிக தொல்லைகள் ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்

தமிழகம் முழுவதும் கொரோனா காலத்திலும் வணிகர்களுக்கு அரசு அதிகாரிகளால் அதிக தொல்லைகள் ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்

 • Last Updated :
 • Share this:
  தமிழகம் முழுவதும் கொரோனா காலத்திலும் வணிகர்களுக்கு அரசு அதிகாரிகளால் அதிக தொல்லைகள் ஏற்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

  கோயம்பேடு காய்கறி சந்தையில்  உள்ள கடைகளுக்கு சென்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வியாபாரிகளை நேரில் சந்தித்து பேசினார். சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், ராஜசேகர், முத்து,செந்தில் ஆகியோர்  உடன் இருந்தனர்.

  இதனை தொடர்ந்து நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விக்கிரமராஜா, கோயம்பேடு காய்கறி சந்தையில்  சிறு மொத்த வியாபாரிகள் கடைகளை மூடுவது குறித்து  அதிகாரிகள் மத்தியில்  ஆலோசனை நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

  ஏற்கனவே தாங்கள் 50 விழுக்காடு வியாபாரிகளை வைத்து தான்
  காய்கறி கடைகளை நடத்தி கொண்டிருப்பதாக தெரிவித்த அவர்,   “கொரோனா காலத்திலும் கூட வியாபாரிகள் மிக கட்டுக்கோப்பாக உள்ளனர்.  17,000 வியாபாரிகளுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு 33 பேருக்கு தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களும் குணமாகி உள்ளனர்”  என கூறினார்.

  கோயம்பேடு காய்கறி சந்தையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று குறிப்பிட்ட விக்கிரமராஜா, அனைத்து  விதத்திலும் அரசுடன் கைகோர்த்து நடந்து வருவதாகவும் மொத்த வியாபாரிகள் கடைகளை  மூடும் நிலை வந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்றும் கூறினார்.

  ஏற்கனவே 8 மாதங்களாக கடைகள் பூட்டப்பட்டு தற்போது தான் கால்வயிறு கஞ்சி குடிக்கலாம் என்கிற எண்ணம்  வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நிலையில் அதற்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தாது என்கிற நம்பிக்கை உள்ளது. தமிழக முதலமைச்சர்  வியாபாரிகளுடைய கஷ்டங்களை நன்கு புரிந்தவர், உணர்ந்தவர் என்று கூறிய விக்கிரமராஜா, தமிழகம் முழுவதும் வியாபாரிகளுக்கு அர்சுத்துறை அதிகாரிகளின் அத்துமீறல், தொல்லைகள் கடுமையாக உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

  இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாகவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.  மொத்த வியாபாரிகள் காய்கறி கடைகளை முழுமையாக அடைக்காமல் சுழற்சி முறையில் இயங்க அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: