ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வீடியோ கேம் விளையாட பெற்றோர் எதிர்ப்பு... 1.5 கிலோ தங்கம், ரூ. 33 லட்சத்துடன் எஸ்கேப் ஆன சென்னை சிறுவன்

வீடியோ கேம் விளையாட பெற்றோர் எதிர்ப்பு... 1.5 கிலோ தங்கம், ரூ. 33 லட்சத்துடன் எஸ்கேப் ஆன சென்னை சிறுவன்

வீடியோ கேம் விளையாடுவதற்கு இடையூறு செய்தால், எந்த நிலைமைக்கும் சிறுவர்கள் செல்வார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

வீடியோ கேம் விளையாடுவதற்கு இடையூறு செய்தால், எந்த நிலைமைக்கும் சிறுவர்கள் செல்வார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

வீடியோ கேம் விளையாடுவதற்கு இடையூறு செய்தால், எந்த நிலைமைக்கும் சிறுவர்கள் செல்வார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வீடியோ கேம் விளையாட பெற்றோர் இடையூறாக இருந்து வந்ததால், சென்னையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன், ரூ. 33 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கத்துடன் (ரூ.75 லட்சம் மதிப்பு)எஸ்கேப் ஆகியுள்ளார். அவரை சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் பிடித்து பெற்றோருடன் ஒப்படைத்துள்ளனர்.

  'வீடியோ கேமில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகள்' - இதுதான் இன்றைய கால பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முதன்மையாக உள்ளது. இதை சரியாக கையாளாவிட்டால் கடைசியாக பெற்றோர்தான் அவஸ்தைப் பட வேண்டும். அந்த வகையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெற்றோருக்கு மகன் ஒருவன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் (15 வயது )வீடியோ கேம் போதையில் மூழ்கிக் கிடந்துள்ளார். அவரது தந்தை அரசு மெட்ரோ தண்ணீர் ஒப்பந்ததாரர் ஆகவும், தாயார் கல்லூரியில் பேராசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர். எப்போதும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் மகனை பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்தனர். சில நேரங்களில் ஃபோனை பிடுங்கி விடுவதால் சிறுவன் பெற்றோர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

  கடந்த புதன்கிழமை அன்று, தந்தை வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்தி வீட்டில் இருந்து ரூ. 33 லட்சம் ரொக்கப் பணத்தையும், 213 சவரன் தங்க நகைகளையும் பேக்கில் எடுத்துக்கொண்டு சிறுவன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். மாலை வரை மகன் வீட்டுக்கு திரும்பாததால் அச்சமுற்ற பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் ஃபிரான்வின் டேனி தலைமையில் தனிப்படை அமைத்து, சிறுவனை பிடிக்கும் வேட்டையை தொடங்கினார். இதற்கிடையே நகைகள், லட்சங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவன், தனது பழைய போனை மாற்றி விட்டு லேட்டஸ்ட் ஐஃபோனை வாங்கி அதில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

  போன் மாற்றப்பட்டதால் ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் சிறுவன் எங்கே இருக்கிறார் என்பதை போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனின் நண்பர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே, நண்பர் ஒருவருக்கு தான் ''நேபாளம் செல்லும் விமானத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறேன்'' என்று சிறுவன் மெசேஜ் செய்துள்ளார்.

  இதையடுத்து சைபர் கிரைம் உதவியுடன் ஜெட் வேகத்தில் செயல்பட்ட போலீசார், ஏர்போர்ட் அருகே தாம்பரத்தில் ரூம் போட்டிருந்த சிறுவனை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீடியோ கேம் விளையாட பெற்றோர் இடையூறாக இருந்ததும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதும் தெரியவந்தது. மேலும், எந்த தொந்தரவும் இல்லாமல் நேபாள நாட்டுக்கு சென்று வீடியோ கேம் விளையாட சிறுவன் திட்டமிட்டு இருந்திருக்கிறார். புதன் கிழமை வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், வியாழன் காலை 4 மணிக்கு நேபாளம் செல்லும் விமானத்திற்கு, டிக்கெட் பதிவு செய்து வைத்துள்ளார்.

  தற்போது, பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் செலவு செய்தது போக, மீதி பணமும் நகைகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம் விளையாடுவதற்கு இடையூறு செய்தால், எந்த நிலைமைக்கும் சிறுவர்கள் செல்வார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Crime News, Video Game