Home /News /tamil-nadu /

கபாலீஸ்வரர் கோயில் பெருவிழா: சென்னையின் முக்கிய இடங்களில் 15,16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

கபாலீஸ்வரர் கோயில் பெருவிழா: சென்னையின் முக்கிய இடங்களில் 15,16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

கோப்பு படம்

கோப்பு படம்

தேவைப்படும் பட்சத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பிஎஸ் சிவசாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வரைஒரு வழி சாலையாக போக்குவரத்து அமல்படுத்தப்படும்.

    கபாலீஸ்வரர் கோயில் பெருவிழாவை முன்னிட்டு சென்னையில் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா 09.03.2022 முதல் 18.03.2022 வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு தேவைப்படும் நேரங்களில் பின் வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

    மேலும் 15.03.2022 தேர் திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 16.03.2022 அன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 2 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

    மேற்கண்ட நாட்களில் கீழ்க்கண்டவாறு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

    1. லஸ் சந்திப்பிலிருந்து - ஆர்.கே. மடம் சாலை
    2. புனிதமேரி சாலையில் இருந்து - ஆர்.கே. மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி
    3. கச்சேரி சாலையில் இருந்து - மத்தள நாராயணன் தெரு மற்றும் சிபி கோவில் தெரு,
    4. மாங்கொல்லை தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெரு - கிழக்கு மாட வீதி
    5. கிழக்கு சித்ர குளம் தெருவிலிருந்து - வடக்கு சித்ரகுளம் தெரு
    6. மேற்கு சித்திர குளம் தெரு, டிஎஸ்வி கோவில் தெரு மற்றும் ஆதாம் தெரு - தெற்கு மாட வீதி
    7. டாக்டர் ரங்கா சாலையில் இருந்து - வெங்கடேச அக்ரகாரம் சாலை

    இதையும் படிங்க - சென்னையில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை.. கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது!

    லஸ் சந்திப்பை அடைந்து அடையாறு மற்றும் மந்தை வெளியைநோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் லஸ் சர்ச் ரோடு, லஸ் அவின்யு, லஸ் அவென்யு ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, டாக்டர் ரங்கா ரோடு, வாரன் ரோடு, செயின்ட் மேரிஸ் ரோடு, ஆர்கே மட் ரோடு மற்றும் மந்தைவெளியை அடைந்து செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

    மந்தை வெளி சந்திப்பை நோக்கி வந்து மந்தை வெளி அடைந்து பாரிஸ் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வி.கே. அய்யர் ரோடு, சிரிங்கேரி மடம் ரோடு, செயின்ட் மேரிஸ் ரோடு, வாரன் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டி செல்வா ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆலிவர் ரோடு, யூ திருப்பம், முசிரி சுப்ரமணியம் சாலை மற்றும் பிஎஸ் சிவசாமி சாலை வழியாக செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

    கச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும்பட்சத்தில் சாந்தோம் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சந்திப்பில் திருப்பப்பட்டு காந்தி சிலையை அடைந்து ஆர்.கே. சாலை, வி.எம். சாலை மற்றும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பை அடையலாம்.

    தேவைப்படும் பட்சத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பிஎஸ் சிவசாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வரைஒரு வழி சாலையாக போக்குவரத்து அமல்படுத்தப்படும்’இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai, Traffic

    அடுத்த செய்தி