Home /News /tamil-nadu /

திருவொற்றியூர் கட்டிட விபத்து: 24 குடும்பங்களை காப்பாற்றிய வட்டச் செயலாளர் தனியரசு

திருவொற்றியூர் கட்டிட விபத்து: 24 குடும்பங்களை காப்பாற்றிய வட்டச் செயலாளர் தனியரசு

திருவொற்றியூர் கட்டிட விபத்து

திருவொற்றியூர் கட்டிட விபத்து

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மக்கள் அனைவரும் முன்பே அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    சென்னை திருவொற்றியூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருந்து தங்களை காப்பாற்றியது தனியரசு என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1993-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு  கட்டப்பட்டு 1998-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. இதில் 24 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் B பிளாக்கில் உள்ள கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரச்னை எதுவும் பெரிதாக இல்லாததால் மக்கள் உறங்கச் சென்றுள்ளனர்.

    Also Read: உல்லாசமாக இருக்க தாய்மாமன் வீட்டில் கைவைத்த இளைஞன் - காஞ்சிபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    நேற்று காலை இதுகுறித்து அருகில் இருந்த திமுக வட்ட செயலாளர் தனியரசுவை அழைத்து வந்த அப்பகுதி மக்கள் வீடு விரிசல் விடுகிறது பாருங்கள் எனக் கூறியுள்ளனர். தனியரசு அந்தப்பகுதியை சுற்றி பார்வையிட்டுள்ளார். அப்போது லேசான சத்தத்துடன் கீழ்ப்பகுதியில் விரிசல் அதிகரிப்பதை கவனித்து வீட்டின் நிலையை உணர்ந்துள்ளார்.   கட்டடத்தில் யாரும் இருக்க வேண்டாம் எல்லோரும் கீழே வாருங்கள் எனக் கூறியுள்ளார்.

    வீடு இடிய போகிறது என கூறினால் மக்கள் பதற்றம்  அடைந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் முதலில் எல்லோரும் கீழே வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் கீழே வந்துள்ளனர். அப்போதே வீடு பள்ளத்தில் இறங்க துவங்கிவிட்டது. இதனையடுத்து வேறு யாரும் உள்ளே இருக்கிறார்களா என்று அவரே மூன்றாவது மாடி வரை சென்று பார்த்துவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

    Also Read:  “ஜல்லிக்கட்டு தான் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி” - தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்!

    மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.  வீடு இடிந்து விழுந்ததை கண்ட அப்பகுதி மக்கல் கலங்கிப்போயினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  இதனால் தங்களை காப்பாற்றியது தனியரசு என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Building collapse, Chennai, DMK, Thiruvotriyur

    அடுத்த செய்தி