Home /News /tamil-nadu /

கடை ஊழியர் என நினைத்து கொள்ளையனுக்கு உதவி... கொள்ளையை அரங்கேற்றி சாவகாசமாக நடந்து சென்ற கொள்ளையன்

கடை ஊழியர் என நினைத்து கொள்ளையனுக்கு உதவி... கொள்ளையை அரங்கேற்றி சாவகாசமாக நடந்து சென்ற கொள்ளையன்

கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி

கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி

கடையினுள் சென்ற மர்ம நபர் கடையில் இருந்த ரூபாய் 6 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாவில் இருந்த ரூபாய் 25 ஆயிரம் பணம் மற்றும் 8 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை சாக்குப்பையில் போட்டு கட்டிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
சென்னையில் கடை ஊழியர் என நினைத்து கொள்ளையனுக்கு இருவர் உதவி செய்த  நிலையில், சவாகாசமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி எஸ்கேப் ஆகியுள்ளார் அந்த பலே கொள்ளையன். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை காசி திரையரங்கம் எதிரே அப்துல் ரசிக் என்பவர் அல் அமீன் என்ற பெயரில் டீ கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். கொரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று இரவு 9.40 மணியளவில் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம் காவலாளி மர்ம நபரைப் பார்த்து யார் நீங்கள்? எதற்காக கடையின் ஷட்டரை உடைத்து வருகின்றீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர், தான் இந்த கடையில் பணிபுரிந்து வருவதாகவும், தனது பொருட்கள் மற்றும் பர்ஸ் ஆகியவை கடையின் உள்ளே இருப்பதாகவும் மேலும் தான் தற்போது ஊருக்கு கிளம்பி கொண்டிருப்பதால் கடை முதலாளியிடம் சொல்லி விட்டதாகவும்  கூறியுள்ளார். இதனை நம்பிய காவலாளியும் கடை திறப்பதற்கு மர்ம நபருக்கு உதவி செய்துள்ளார்.

பின்பு கடையினுள் சென்ற மர்ம நபர் கடையில் இருந்த ரூபாய் 6 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாவில் இருந்த ரூபாய் 25 ஆயிரம் பணம் மற்றும் 8 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை சாக்குப்பையில் போட்டு கட்டிக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

மேலும் படிக்க: சிலை சொல்லும் சேதி; ராவணனின் சிந்தையெல்லாம் சீதை!


மீண்டும் கடையின் ஷட்டரை மூடுவதற்கு சிரமமாக இருந்ததால் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை அழைத்து, தான் கடையில் பணிபுரியும் ஊழியர் என்றும், கடையின் ஷட்டரை மூட சிரமமாக இருப்பதாகவும் அதனால் உதவி செய்யுமாறும் கூறி உள்ளார். இதனால் அந்த நபரும் கடையின் ஷட்டரை மூடுவதற்கு கொள்ளையனுக்கு உதவி செய்துள்ளார்.

பின்பு கடையை மூடிவிட்டு சாவகாசமாக கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காலையில் கடைக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படிக்க: ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன்..


சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கொள்ளையன் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கடை ஊழியர் என நினைத்து கொள்ளையனுக்கு இரண்டு நபர்கள் உதவி செய்திருப்பதும் தெரியவந்தது. கடை உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Theft

அடுத்த செய்தி