Home /News /tamil-nadu /

திடீர் கனமழையால் திணறிய சென்னை.. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

திடீர் கனமழையால் திணறிய சென்னை.. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.   பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இரவும் இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    Also Read : தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

    தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இன்று அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    Also read:  இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Red Alert

    அடுத்த செய்தி