Home /News /tamil-nadu /

64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? மாணவன் உயிரிழப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? மாணவன் உயிரிழப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

பள்ளி மாணவன் உயிரிழப்பு

பள்ளி மாணவன் உயிரிழப்பு

மாணவன் திக்‌ஷித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஓட்டுநர் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். இதில் பின்னால் வகுப்பு அறைக்கு நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராத வகையில் வேன் மோதியது

மேலும் படிக்கவும் ...
    பள்ளி வாகனம் மோதி  சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 64 வயது முதியவரை பள்ளி வாகன ஓட்டுனராக நியமித்தது ஏன் என்று கேட்டு பள்ளி நிர்வாகத்திற்கு  தமிழக பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர்கள் வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியினர். இவர்களுடைய 7 வயது மகன் தீக்‌ஷித்  ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  வழக்கம்போல் இன்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில்  சிறுவன் பள்ளிக்கு சென்றான்.

    பள்ளி வேனை பூங்காவனம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும். வேனில் இருந்து திக்‌ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது மாணவன் திக்‌ஷித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஓட்டுநர் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். இதில் பின்னால் வகுப்பு அறைக்கு நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராத வகையில் வேன் மோதியது. மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் உயிரிழந்தான்.

    இது தொடர்பாக சிறுவனின் தாயார் அளித்த பேட்டியில், 8.30 மணிக்கு பள்ளிக்கு குழந்தையை பள்ளி வாகனத்தை ஏற்றி அனுப்பினேன் 8.40 க்கு பள்ளியில் இருந்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கையில் வாய்,மூக்கு என உடல் முழுக்கு ரத்தமாக இறந்த நிலையில் இருந்தார்.

    இதையும் படிங்க: பல போராட்டங்களுக்குப் பிறகு செவிலியர் படிப்பு: தற்போது அரசுப் பணி- திருநங்கை தமிழ்ச்செல்வியின் சாதனைப் பயணம்


    பள்ளி தரப்பில் இதுவரை என்ன நடந்தது என்று ஒருவர் கூட சொல்லவில்லை. உணவு கூடையை விட்டு விட்டு சென்றதாகவும், தவறி விழுந்தாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கியுள்ளது. பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்,   பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் படிக்க: செலவுக்கு பணம் தராத தாயை எரித்துகொன்ற மகன்: 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிப்பு


    இதனிடையே,  மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பணியாளர் நியமனம் செய்யாதது ஏன்? 64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? பள்ளி வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறங்கி சென்று விட்டார்களா என்பதை பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? பள்ளி தாளாளர் விபத்து நடைபெற்ற தகவல் கிடைத்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை புரியாதது ஏன் என்பது குறித்தும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவுடப்பட்டுள்ளது.

    24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Accident, School boy, School Bus

    அடுத்த செய்தி