சிறுவனை கொலைவெறியுடன் கடிக்க துரத்தும் நாய்கள் - நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
சிறுவனை கொலைவெறியுடன் கடிக்க துரத்தும் நாய்கள் - நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
Dog : சாலையில் விளையாடி வரும் சிறுவர்களையும் முக கவசம் அணிந்து செல்லும் பொதுமக்களை தெருவைக் கடக்க விடாமல் தினந்தோறும் இதேபோல்தான் துரத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சைக்கிள் ஓட்டும் சிறுவனை கொலைவெறியுடன் கடிக்க துரத்தும் வெறி நாய்கள்நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் பன்னீர் செல்வம் தெருவில் கடந்த 7 ம் தேதி இரவில் சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே கைக்கிளை ஒட்டி விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்பொழுது அங்கிருந்த 2 தெருநாய்கள் சிறுவனை வேகமாக துரத்திஉள்ளது. நாய்களிடமிருந்து தப்பிக்க சிறுவன் சைக்கிளை வேகமாக இயக்கி சென்றுள்ளான் இதில் அவன் நிலைதடுமாறி அங்கிருக்கும் வாகனத்தில் மோதி கீழே விழுகிறான்.
இதனையடுத்து அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் நாய்களை விரட்டி சிறுவனை மீட்கின்றனர். இவை அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயத்தில் தப்பி வந்த சிறுவன் பின்னர் உடல் நலம் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சாலையில் விளையாடி வரும் சிறுவர்களையும் முக கவசம் அணிந்து செல்லும் பொதுமக்களை தெருவைக் கடக்க விடாமல் தினந்தோறும் இதேபோல்தான் துரத்தி வருவதாகவும் பத்துக்கும் மேற்பட்டவர்களை கடித்து இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் முகபேரில் சிறுமி ஒருவரை நாய்கள் தாக்கி படுகாயமடைந்து குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அம்பத்தூர் மாநகராட்சி மண்டலம் 7 அதிகாரிகள் வெறி நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: கன்னியப்பன் (அம்பத்தூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.