Home /News /tamil-nadu /

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.120 வரை கிடுகிடுவென உயர்வு..

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.120 வரை கிடுகிடுவென உயர்வு..

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.120 வரை கிடுகிடுவென உயர்வு..

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.120 வரை கிடுகிடுவென உயர்வு..

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதால், சில்லறை சந்தையில் கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். 

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், அங்கிருந்து தக்காளிகளை எடுத்து அனுப்ப முடியாத நிலையில், விவசாயிகள் உள்ளனர்.

    இதனால், கோயம்பேடு சந்தைக்கு, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 லாரிகளில் சுமார் 4 ஆயிரம் டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வரத்து பாதியாக குறைந்துள்ளது.

    இதனால், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கோயம்பேட்டைச் சுற்றியுள்ள தியாகராய நகர், வில்லிவாக்கம், ஆவடி, அமைந்தகரை காய்கறி சந்தைகளிலும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.

    தொடர் மழை பெய்து வருவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள், தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை உயர்த்திவிட்டதாக பொதுமக்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், இதை மறுக்கும் வியாபாரிகள், வரத்து அதிகரித்து விட்டால், விலை தானாக குறைந்து விடும் என தெரிவிக்கின்றனர்.

    சென்னையைப் போல, சேலம் தலைவாசல் காய்கறிச் சந்தையிலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர் மழையால், தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதனால், கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி, தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வரத்து மேலும் குறைந்தால், தக்காளி விலை 100 ரூபாயைத் தாண்டக் கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai Rain, Koyambedu, Tomato

    அடுத்த செய்தி