முகக்கவசத்தை கூட விட்டுவைக்காத கொள்ளையன்.. தாம்பரத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை - வணிகர்கள் அதிர்ச்சி

தாம்பரம் கொள்ளை

இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர்கள்  காலை அருகில் உள்ளவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்ததன்பேரில் வந்து பார்த்துள்ளனர்.

 • Share this:
  தாம்பரத்தில் அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை உடைத்து பணம் செல்போன்கள் திருட்டு விற்பனைக்காக வைத்திருந்த முக கவச பண்டல்களை கூட விட்டு வைக்காமல் அதையும் கொள்ளையடித்து போன கொள்ளையனால் வணிகர்கள் அதிர்ச்சி. 

  சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பழைய ஜி.எஸ்.டி சாலையில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை போனதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் மேலும் நான்கு கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது
  விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மீன் கடையில் இருந்து 2 பழைய செல்போன், சுப்புராயன் என்பவரது கடையில் 4000 ரூபாய் பணம் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த முக கவச பண்டல்களையும் எடுத்துச் சென்றுள்ளனர், கணேஷ் பாபு என்பவரது பால்  கடையில் 5000 ரூபாய் பணம், தமீம் அன்சாரி என்பவரது செல்போன் கடையில் 10 பழைய செல்போன்கள், ஸீப்பிக்கர் பாக்ஸ்,  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

  Also Read: பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி கைது..! - போலீசிடம் சிக்கியது எப்படி?

  இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர்கள்  காலை அருகில் உள்ளவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்ததின் பேரில் கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கடையில் இருந்த பணம், பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.  இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடையின் பூட்டை உடைத்த கொள்ளையன் கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய இரும்பு ராடை ரயில்வே தண்டவாளத்தின் அருகே போட்டு விட்டு சென்றுள்ளான். அதனை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் இனியாவது இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: சுரேஷ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: