• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என் ஏரியாவில் ரவுண்ட்ஸ் வந்தால் கொன்றுவிடுவேன்- காவல்நிலையத்துக்குள் புகுந்து மிரட்டும் சென்னை ரவுடி

என் ஏரியாவில் ரவுண்ட்ஸ் வந்தால் கொன்றுவிடுவேன்- காவல்நிலையத்துக்குள் புகுந்து மிரட்டும் சென்னை ரவுடி

Youtube Video

ஏரியாவிற்குள் ரவுண்ட்ஸ் வந்தால் போட்டுத் தள்ளி விடுவேன் என காவல்நிலையத்திற்குள்ளேயே சென்று போலீசாரை ரவுடி ஒருவர் மிரட்டும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கார்த்தி என்கிற பிச்சைக்கார்த்தி. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த 26ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் அபிராமபுரம் காவல்நிலையத்திற்குள் புகுந்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    மதுபோதையில் இருந்த அவர், எலுமிச்சை பழத்தை சுவைத்துக் கொண்டும், ஒரு கையில் பிளேடை வைத்துக் கொண்டும் போலீசாரை அநாகரிகமாகவும், ஒருமையில் பேசியும் எச்சரிக்கை விடுத்தார்.

    காவல்நிலைய பாரா பணியில் இருந்த காவலர் சதீஷ் குமார் என்பவரிடம் ஏரியாவில் ரவுண்ட்ஸ் வந்தால் போட்டுத்தள்ளிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரவி சங்கர் மற்றும் கார்த்திகேய பாண்டியன் ஆகிய இருவருமே ரவுடியின் அட்டகாசம் தாங்காமல் காவல்நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.

    அங்கிருந்த காவலர்கள் மட்டும் அவரிடம் பேசி வெளியே அனுப்பி வைத்தனர். ரவடி பிச்சை கார்த்தி இதற்கு முன்னர் 6 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் இரவு 10:30 மணிக்கு மேல் பழைய காவல் நிலைய காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து காவல் நிலையத்தின் உள்ளே இருந்த கண்ணாடியை உடைத்துள்ளார்.

    அப்போது காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு வைத்திருந்த உணவினை மதுபோதையில் சாப்பிட்டுவிட்டு போலீசாரை மிரட்டி சென்றுள்ளார்.

    ரவுடி பிச்சை கார்த்தி மீது இதுவரை நான்கு வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மதுபோதையில் பிளேடுடன் வந்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: