Home /News /tamil-nadu /

யார் பெரிய ரவுடி.. டபுள் ரஞ்சித் கொலையில் திடுக்கிடும் தகவல்

யார் பெரிய ரவுடி.. டபுள் ரஞ்சித் கொலையில் திடுக்கிடும் தகவல்

சென்னை ரவுடி கொலை

சென்னை ரவுடி கொலை

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வில்லிவாக்கம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடிகளுக்கு இடையே யார் பெரியவர் என்பதில் ஏற்பட்ட மோதல் ரவுடி டபுள் ரஞ்சித் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை வில்லிவாக்கம்  பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் டபுள் ரஞ்சித். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வியாழன்கிழமை மாலை நியூ ஆவடி சாலையில் வைத்து. ரவுடி டபுள் என்ற ரஞ்சித்தை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பித்துச் சென்றது. வில்லிவாக்கம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட கருணாகரன் என்பவரது கொலைக்கு பழி தீர்க்க அக்கொலையில் தொடர்புடைய வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார்.

    Also Read: பள்ளி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் ரூட்டு தல கலாச்சாரம்.. வைரலாகும் வீடியோ

    அந்த கொலை வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த டபுள் ரஞ்சிதும் ஒரு குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பிணையில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.எனவே கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட அலெக்ஸ்-ன் கொலைக்கு பழி தீர்க்கவே அவனது கூட்டாளிகளால் தற்போது ரவுடி டபுள் ரஞ்சித் கொலை செய்திருக்கலாம்  என போலீஸார் சந்தேகித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வில்லிவாக்கம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 

    ரஞ்சித் குமார் என்கின்ற டபுள் (வயது 22). இவர் மீது 2 கொலை வழக்குகள் கொலை முயற்சி வழக்குகள் உட்பட்ட ஆகமொத்தம் 7 வழக்குகளில் தொடர்புடையவர் ரஞ்சித் என்பது தெரியவந்தது. வில்லிவாக்கம் பகுதியில் யார் பெரிய ரவுடி என ரஞ்சித்குமார் கூட்டாளிகள் சதீஷ்குமார், ஜானகிராமன், ஐயப்பன், பிரவுன் என்கின்ற மணி கார்த்தி என்கின்ற புல்லட் கார்த்திக் ஆகியோருக்கும். எதிர்தரப்பினரான செல்வம் என்கின்ற சொட்ட செல்வம், கார்த்திக் என்கின்ற காட்டான் கார்த்திக் , உதயகுமார், ராதாகிருஷ்ணன், சீனு என்கின்ற சீனிவாசன் ,ஜெயகாந்தன் , தினேஷ்குமார்,பத்மநாபன்,விமல் குமார்,ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் புதன்கிழமை அன்று டபுள் என்கின்ற ரஞ்சித் குமார், செல்வம் என்கின்ற சொட்ட செல்வத்தை தாக்கியதில் வலதுகை தோள்பட்டையில் பலத்த அடியும் இடது கையில் காயமும் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சொட்ட செல்வத்தின் கூட்டாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதிதிட்டம் தீட்டினர். இந்த நிலையில்  காட்டான் என்கின்ற கார்த்திக் ரஞ்சித்தின் வீட்டுக்குச் சென்று ரஞ்சித்தை அழைத்தபோது அவரது அம்மா நாகம்மாள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி நான் ரஞ்சித்தை கடைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கேன் என்று கூறி வீட்டிலிருந்து ரஞ்சித்தை அழைத்துள்ளார்.

    Also Read: ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

    கார்த்தியின் தந்திரத்தை அறியாத ரஞ்சித்தும் தனது சகோதரியின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கார்த்திக்குடன் நியூ ஆவடி ரோடு சாலையில் சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கின் நண்பர்கள் நியூ ஆவடி சாலையில் காத்திருந்தனர் ரஞ்சித்துடன் அங்கு சென்ற கார்த்திக் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் சொட்ட செல்வத்தின் கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டத் தொடங்கினர். இதில் சுதாரித்துக்கொண்ட ரஞ்சித் தப்ப முயன்றபோது காட்டான் கார்த்தி அரிவாளால் கழுத்தை சரமாரியாக  டபுள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த வில்லிவாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  கூட்டாளிகள்  பாடி மேம்பாலம் அருகே சத்யா நகரில் உதயா ,காட்டான் என்கின்ற கார்த்திக், சீனு என்கின்ற சீனிவாசன், மறைந்து இருப்பதை கண்டறிந்தனர் தனிப்படை போலீசார். குற்றவாளி பிடிப்பதற்காக முயற்சித்தபோது  தப்பிச் செல்வதற்கு முயன்ற அப்பகுதியில் உள்ள மதில் சுவரின் மேல் ஏறி குதித்தார் உதயா காட்டான் என்கின்ற கார்த்தி சீனி என்கின்ற சீனிவாசன் மூவருக்கும் கை கால் முறிவு ஏற்பட்டது.

    உடனே தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்கள் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ரஞ்சித் குமாரின் தாயார் நாகம்மாள் புகாரின் அடிப்படையில் 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Chennai, Crime News, Murder

    அடுத்த செய்தி